Friday, March 13, 2015

மத்திய நிதியுதவி திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த பாமக வலியுறுத்தல்!

பள்ளிக் கல்வித் துறையில் மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களை தமிழக அரசு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் புதிய பள்ளிகளைக் கட்டவும், ஏற்கெனவே கட்டப்பட்ட பள்ளிகளைச் சீரமைக்கவும் வழங்கப்பட்ட பணத்தை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவிகளுக்கு விடுதி கட்டுதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு பயன்படுத்தவில்லை.
இதனால் கடந்த 2012-13-ஆம் ஆண்டு முதல் தமிழகத்துக்குப் புதிய பள்ளிகளைக் கட்டுதல் உள்ளிட்ட எந்தத் திட்டத்துக்கும் நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.
ஒருங்கிணைந்த தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்துக்கான ஆண்டு பணித் திட்டம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை இறுதி செய்வதற்காக தில்லியில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடந்த திட்ட ஒப்புதல் வாரியத்தின் 46-ஆவது கூட்டத்தில்தான் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
எனவே பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment