Wednesday, May 06, 2015

தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

மார்ச் 2015-ல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்ச்சி
பெறாதோருக்கு நடத்தப்படும்சிறப்பு
துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில்
நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி
மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும்,
தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய
தேர்வு மையங்களிலும் 15-ந் தேதி முதல்
20-ந் தேதி வரை தங்கள் பெயரை பதிவு
செய்து கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத
விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வு
கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை
பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென
தனி விண்ணப்பம் எதுவும்
கிடையாது.தேர்வு கட்டணமும்,
செலுத்தும் முறையும் மார்ச் 2015, பிளஸ்-2
தேர்வில்தேர்ச்சி பெறாத அல்லது வருகை
புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50
வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர
கட்டணமாக 35 ரூபாயும், சம்பந்தப்பட்ட
பள்ளிக்கூடங்களில் பணமாக செலுத்த
வேண்டும்.தேர்வுக் கட்டணம் தவிர ரூ.50
பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி,
உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை
வெளியிடுவதற்கு உறுதுணையாக
இருந்த பள்ளி கல்வித்துறையைச் சார்ந்த
அனைத்து அலுவலர்கள்,
தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய
பெருமக்களுக்கு தேர்வுத்துறை
நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு ஒரு
அறிக்கையில் அரசு தேர்வுகள் இயக்குனர்
கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment