Monday, May 18, 2015

இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் திங்கள்கிழமை (மே18) முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல்பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.இது தவிர தனித் தேர்வர்களும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், தேவைப்படும்போது மாணவர்களே தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் வரும் மே 18-ஆம் தேதி முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment