Tuesday, November 26, 2013

அறிவியல் கண்காட்சி: 102 பள்ளிகள்பங்கேற்பு

சென்னையில் 102 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாணவர்களிடையே அறிவியல்
ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான அறிவியல்
கண்காட்சி நடத்தப்படுகிறது.
நடப்புக் கல்வியாண்டுக்கான அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர்
சுந்தரவல்லி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.கண்காட்சியில்
102 அரசு மற்றும் மாநகராட்சி உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்றன.
ஓவ்வொரு பள்ளியிலிருந்தும் 2 பேர் விதம் 200
மாணவர்கள் பங்கேற்று, மரபு சாரா எரிசக்தி,
கணிதம், தகவல் தொழில்நுட்பம், இயற்வேதியியல்,
உயிரியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் சார்ந்த
படைப்புகளின் மாதிரிகளை கண்காட்சியில்
காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த
படைப்புகளை உருவாக்கிய பள்ளிகள் மாநில
மற்றும் தேசிய அளவில் நடைபெறும்
கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெறும் என மாவட்ட
ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார்.

No comments:

Post a Comment