Wednesday, March 05, 2014

மக்களவைத் தேர்தல் அட்டவணை : முழு விவரம்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து புது தில்லியில் இன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் வி.சி சம்பத், நாடாளுமன்றத்தின் 16வது மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் என்றார்.
முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 7ம் தேதி - அசாம், திரிபுரா மாநிலங்களில் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல்
2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 9ம் தேதி - அருணாச்சலம், மணிப்பூர், மிசோரம் உட்பட 5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் தேர்தல்.
3ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 10ம் தேதி - தில்லி, கர்நாடகாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு. அந்தமான், நிகோபார், லட்சத்தீவுகள், கேரளா உட்பட 14 மாநிலங்களில் உள்ள 92 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு வாக்குப்பதிவு
4ம் கட்ட தேர்தல் - 12ம் தேதி - அசாம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு
5ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 17ம் தேதி - 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு. பீகார், மகாராஷ்டிரா உட்பட.
6ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 24ம் தேதி - தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் வாக்குப் பதிவு. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சிக்கிம் மாநில தொகுதிகளிலும் வாக்குப்பதிவு
7ம் கட்ட தேர்தல் -  ஏப்ரல் 30ம் தேதி - ஆந்திரா, பீகார், குஜராத் உட்பட 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் தேர்தல். தேர்தல்.
8ம் கட்ட தேர்தல் - மே 7ம் தேதி - ஆந்திராவில் பீகார், மேற்கு வங்க மாநில தொகுதிகளில் வாக்குப்பதிவு
9வது மற்றும் கடைசி தேர்தல் - மே 12ம் தேதி - 6 மாநிலங்களில் 7 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்
வாக்கு எண்ணிக்கை - மே 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment